இந்தியா, ஜனவரி 6 -- முள்ளங்கி கீரையை நீங்கள் தூக்கி வீசக்கூடாது. அதையும் சமைத்து சாப்பிடவேண்டும். ஏனெனில் அதில் 8 நன்மைகள் உள்ளன. எனவே காயை சமைத்துவிட்டு, கீரையை பொரியல் அல்லது கூட்டு செய்துவிடுங்கள். முள்ளங்கி கீரையின் நன்மைகள் என்னவென்று பாருங்கள். முள்ளங்கி கீரையை நீங்கள் பனிக்காலத்தில் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில், அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை நீங்கள் பராத்தாவில் சேர்த்து செய்யலாம் அல்லது சாலட்கள் அல்லது கறிகளில் சேர்த்து செய்யலாம். இதன் வேர்களும் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இலைகளை பெரிதாக யாரும் கண்டுகொள்ளாமல் தூக்கி வீசிவிடுகிறார்கள். இந்தக் கீரையை நீங்கள் சாப்பிட வேண்டியதற்கான 8 காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

முள்ளங்கி கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய மினரல்களான கால்சியம், இரும...