இந்தியா, மே 18 -- இது ஒரு வித்யாசமான சைட் டிஷ் ரெசிபியாகும். இதை செய்வதற்கு முருங்கைக்கீரையில் ஒரு பொடியை முதலில் தயாரித்துக்கொள்ளவேண்டும். அந்தப் பொடி உருளைக்கிழங்குக்கு இன்னும் கூடுதல் சுவையைத் தரும். இது ஒரு சூப்பர் சுவையான சைட்டிஷ் ஆகும். இதை சாம்பார், ரசம், தயிர் சாதம் அல்லது வெரைட்டி சாதங்கள் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதை செய்வதற்கு உருளைக்கிழங்கை வேகவைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கில் மசாலாப் பொடிகள் சேர்ப்பதற்கு பதில் இந்த முருங்கைக்கீரைப் பொடியை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த முருங்கைக்கீரை - உருளைக்கிழங்கு ஃப்ரையை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடியளவு

* உளுந்து - ஒரு ஸ்பூன்

* பாசிபருப்பு - ஓரு ஸ்பூன்

* எள் - ஒரு ஸ்பூன்

* வர மிளகாய் - 4

* சீரகம் - கால் ஸ்...