இந்தியா, மார்ச் 21 -- முனகாக்கு நிலுவா பச்சடி என்ற பெயரை கேட்டவுடனே நீங்கள் என்னவாக இருக்கும் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா, இது வேறு ஒன்றுமல்ல முருங்கைக்கீரை பச்சடிதான். இதை ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்றுதான் பார்க்கப்போகிறோம். இது சூப்பர் சுவையானது. இதை சாதம், டிஃபன் இரண்டுடனும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதில் காரம், புளிப்பு எல்லாம் சேர்த்து செய்வதால், சூப்பர் சுவையானதாக இருக்கும். முருங்கைக்கீரை ஆரோக்கியம் நிறைந்த ஒரு கீரை என்பதால் இது ஒரு ஆரோக்கியமான ரெசிபி என்றும் கூறலாம்.

* முருங்ககைக்கீரை - 6 கைப்பிடியளவு (சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும்)

* எண்ணெய் - 2 ஸ்பூன்

* தக்காளி - 4

* புளி - எலுமிச்சை அளவு

* உப்பு - தேவையான அளவு

* மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

* பூண்டு - 20 பல்

* கடுகு - அரை ஸ்பூன்

* சீரகம் - கால...