இந்தியா, மார்ச் 7 -- தேங்காய்ப்பால் முருங்கைக்கீரை சாறு என்பதை அரிசி கழுவும் தண்ணீரை வைத்து தயாரிக்கவேண்டும். அந்த தண்ணீரில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. என்பதால் அந்த தண்ணீரில் இதைச் செய்யலாம். மேலும் அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இதை நீங்கள் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.

* முருங்கைக்கீரை - 3 கைப்பிடியளவு (சுத்தம் செய்து ஆய்ந்தது)

* கழனி தண்ணீர் - ஒரு கப் (அரிசியை கழுவிய தண்ணீர் கழனி தண்ணீர் எனப்படும். இதை நீங்கள் சாதம் வடிப்பதற்கு முன் அரிசியை முதல் முறை கழுவிவிட்டு, அந்த நீரை வெளியேற்றிவிட்டு, அடுத்த முறை சிறிது நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த கழனி தண்ணீரில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன)

* தேங்காய்ப்பால் - 2 கப் (இரண்டு முறை பால் எடுத்துக்கொள்ளவேண்டும். முதல் பால் மற்றும் இரண்டாவது பாலை தனியாக வ...