இந்தியா, ஜூன் 23 -- அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்த முருகன் மாநாட்டு மேடையில் அதிமுகவினர் அமர்ந்து இருந்தது அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டதை காட்டுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, 10 கல்லூரிகளைத் தொடங்க அனுமதி பெறப்பட்டு, முதல் கட்டமாக 4 கல்லூரிகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பாட்டில் உள்ளன. 25 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. 136 கோடி ரூபாய் செலவில் ஆய்வகங்கள், நூலகங்கள், மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியில் 3117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு ந...