இந்தியா, மார்ச் 6 -- மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ள நிலையில், காவல் துறையினர் தடுப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு பாஜக சார்பாக இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேரடியாக மக்களை சந்தித்தும், http://puthiyakalvi.in என்ற இணையதளதளம் வாயிலாகவும் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது.

சென்னை, எம்ஜிஆர் நகர் பகுதியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநிலத் த...