இந்தியா, மார்ச் 7 -- மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரியும், ஏழை, பணக்காரர் வேறுபாடு இன்றி அனைத்து மாணவர்களும் மூன்று மொழி கற்க வழி செய்யக் கோரியும் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பாஜக தொடங்கி உள்ளது. மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கும் பணிகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமார், பாஜகவினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து ...