இந்தியா, பிப்ரவரி 26 -- தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில், பிரபல நாட்டுப்புற பாடகர் கிடாக்குழி மாரியம்மாளின் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் நலன், நாட்டு நலன், வளர்ச்சி பற்றி கவலை இல்லாமல் பணம் பற்றி சிந்திக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட பண்ணையார்களை அரசியலைவிட்டே விரட்டுவதுதான் நமது முதல் வேலை. அதை ஜனநாயக முறைப்படி செய்ய 2026 தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம்.

அந்த தேர்தலை சந்திக்க பூத் லெவல் ஏஜெண்ட்கள் முக்கியம். தமிழ்நாட்டில் பெரிய கட்சிகளுக்கு ம...