இந்தியா, மார்ச் 6 -- சோவியத் ஒன்றியம் உடைந்ததற்கு ரஷ்ய மொழித் திணிப்பே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில் திமுகவினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார். அதில், மொழிவழி மாநிலங்களாக உருவாக்கப்பட்ட இந்திய ஒன்றியத்தில், ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழி மீது மற்றொரு மொழியைக் கட்டாயமாகத் திணிக்கும்போது அந்த மாநில மக்கள் பேசுகின்ற மொழியும் அதன் பண்பாடும் சிதைக்கப்படும். இந்தியும் சமஸ்கிருதமும் வலிந்து திணிக்கப்படுவதால் இந்திய மொழிகள் பலவும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன. தமிழ்நாடு தன் உயிரினும் மேலானத் தமிழையும் அதன் பண்பாட்டையும் உயிரைக் கொடுத்து காப்பாற்றியுள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1961ஆம் ஆண்டு எடுக்கப்பட்டபோது இந்தியாவிலிருந்த தாய்மொழிகள...