இந்தியா, மார்ச் 7 -- மூன்றாவது மொழியைத் தமிழ்நாட்டின் மீது திணிக்க முயற்சிப்பதும், இந்த வல்லாதிக்கப் போக்கை ஏற்க மறுத்தால் நிதி தர முடியாது என மறுப்பதும் தமிழர்கள் மீது பா.ஜ.க. அரசு திட்டமிட்டு நடத்துகின்ற தாக்குதலாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கை என்ன என்பதில் தெளிவாக இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுதான் மாநில உரிமைகளை மதிக்காமல், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியைத் தரமாட்டோம் என வீண்பிடிவாதம் பிடிக்கிறது.

இந்திய ஒன்றியத்தில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற...