இந்தியா, பிப்ரவரி 21 -- கல்வியை அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இடையே கருத்து வேறுபாடு எழுந்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 2500 கோடி நிதியை வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்று வருகிறார். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற...