இந்தியா, ஏப்ரல் 9 -- மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ரஜினிகாந்த் பேசியுள்ளதாவது: "அனைவருக்கும் வணக்கம். ஆர்.எம். வீரப்பன் குறித்து பேசுவது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் பாலச்சந்திரன், நடிகர் ஷோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் என் மீது மிகுந்த அன்பு காட்டியனார்கள். இவர்கள் தற்போது இல்லை என்று சொல்லும் போது அவர்களை நான் அதிகமாக மிஸ் செய்கிறேன்.

'பாட்ஷா' திரைப்பட 100 நாள் விழா நடைபெற்ற மேடையில் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை வைத்துக்கொண்டே வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசிவிட்டேன். அமைச்சராக இருந்த அவரை வைத்துக்கொண்டே நான் பேசியிருக்கக் கூடாது. ஆனால், அன்றைய சூழலில் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன்...