இந்தியா, மார்ச் 19 -- ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகீர் உசேன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பாரபட்சம் இன்றி நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

நெல்லையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகீர் உசேன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் உரையாற்றி இருக்கிறார்கள். இதிலே கீழ்காணும் உறுப்பினர்கள் தங்களுடைய கவனர்ப்பு தீர்மானத்தை கொடுக்கிற போது பெயர்கள் எழுதி இருந்திருக்கிறார்கள். அவர்களை ம...