இந்தியா, ஜூன் 23 -- நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் பிலிகேரே கிராமத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ரஜினிகாந்த் இருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள், அவரை காண கூட்டம் கூட்டமாக கூடினர்.

இந்த நிலையில் அவர்களைப் பார்த்த ரஜினிகாந்த், காரின் சன் ரூஃப் வழியாக வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அவரை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில், இந்தப்படத்தின் இயக்குநர் நெல்சன் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை 41 வது பிறந்தநாளை ரஜினிகாந்துடன் கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டது. அதில், ரஜினிகாந்த் நெல்சனுக்கு...