இந்தியா, மார்ச் 30 -- இஸ்லாமியர்களின் வீட்டு விருந்துகளில் பரிமாறப்படும் முத்தஞ்சன் ரெசிபியை எப்படி செய்வது என்று பாருங்கள். இந்த ரம்ஜான் பண்டிகைக்கு வீடுகளில் செய்து அசத்தலாம். இதைச் செய்வதும் எளிது. விருந்துகளுக்கு மட்டுமின்றி, பண்டிகைக் காலங்களிலும் வீட்டில் செய்வதற்கு ஏற்ற ஸ்வீட் ரெசிபிதான் இந்த முத்தஞ்சன். இதை செய்வதற்கு பிரியாணி அரிசிதான் ஏற்றது. பாஸ்மதி அல்லது சீரகச் சம்பா அரிசியைப் பயன்படுத்தி இதை செய்யும்போது சூப்பர் சுவையானதாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - 100 கிராம்

* முந்திரி - 8

* சாரப்பருப்பு - ஒரு ஸ்பூன்

* திராட்சை - ஒரு கைப்பிடியளவு

* பால் - அரை லிட்டர்

* ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை

* சர்க்கரை - கால் கப்

* இனிப்பு இல்லாத கோவா - ஒரு கப்

* குங்க...