இந்தியா, மார்ச் 5 -- All Party Meeting: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 56 கட்சிகள் பங்கேற்றன. பாஜக, நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை இதோ.. "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத் தான், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இதை குறைக்கின்ற அபாயம் நெருங...