இந்தியா, மே 6 -- சிதம்பரம் முட்டைச் சட்னி பெயரைக் கேட்டவுடனே முட்டையிலும் சட்னியா என எண்ணத்தோன்றும். ஏனெனில் இப்போது அனைத்து வகை காய்கறிகளிலும் சட்னி செய்வது பிரபலமாகி வருகிறது. இது சட்னியும் கிடையாது. ஆம்லேட்டும் கிடையாது. இதைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொடிமாஸ் மற்றும் கலக்கி சேர்த்து வித்யாசமான சுவையை இந்தச் சட்னி கொடுக்கும். குறிப்பாக கலக்கி பிரியர்களுக்கு இது மிகவும் பிடித்த ரெசிபியாகும். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (கீறியது)

* தக்காளி - 1

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்ப...