இந்தியா, பிப்ரவரி 21 -- முட்டை கோஸ் வைத்து பொரியல், சாம்பார் எல்லாம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஏன், பஜ்ஜி போன்ற ரெசிபிக்களைக் கூடி சுவைத்திருப்பீர்கள். ஆனால் காரக்குழம்பு போலவே இருக்கும் இதுபோன்ற குழம்பு செய்து சுவைத்து இருக்கிறீர்களா? சுவையும் அலாதியானதாக இருக்கும். இதில் கத்தரிக்காயும் சேர்த்து செய்வார்கள். ஆனால் அது உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். இது பார்ப்பதற்கு காரக்குழம்பு போலவே இருக்கும் ஆனால் சுவை வேறு மாதிரி இருக்கும். அந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* முட்டை கோஸ் - கால் கிலோ

* புளி - எலுமிச்சை அளவு

* பூண்டு - 6 பல்

* உப்பு - தேவையான அளவு

* கத்தரிக்காய் - 4

* தாளிக்க தேவையான பொருட்கள்

* நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

* கடுகு - கால் ஸ்பூன்

* பெருங்காயத்தூள் - கால் ஸ...