இந்தியா, ஏப்ரல் 9 -- Navapancha Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக ஒரு சிலர் சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.

அதேசமயம் கிரகங்கள் ஒரு ராசிகள் இடம் மாறும் பொழுது மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அல்லது அவர்கள் தங்களது பார்வையால் ஒன்றிணையும்போது பல ராஜ யோகங்கள் உருவாக்கும். இந்நிலையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று சனிபகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் 120 டிகிரியில் ஒன்றிணைந்து நவபஞ்ச யோகத்தை உருவாக்கியுள்ளனர்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் பகவான் ஒன்பதாவது வீட்டிலும் சனிபகவான் ஐந்த...