இந்தியா, ஏப்ரல் 3 -- Sani: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது ராசி மாற்றத்தை செய்ய உள்ளார். சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகள் அனைத்தையும் திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

நீதியின் நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் இந்த மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற 2027 வரை இதே ராசியில் சனிபகவான் பயணம் செய்வார்.

சனிபகவானின் மீன ராசி பயணம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் சனி மீன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது கு...