இந்தியா, மார்ச் 18 -- Budhan Asthamanam: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். கிரகங்களின் ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.

சிறிய கிரகமாக இருந்தாலும் புதன் பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகப் போகின்றார். சனி பகவானும் தனது அஸ்தபனத்தை முடித்துவிட்டு மீன ராசிக்கு செல்கின்றார்.

புதன் பகவானின் அஸ்தமனம் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டமும், ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களும் ...