இந்தியா, ஏப்ரல் 2 -- Lord Mercury: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் சந்திர பகவானுக்கு அடுத்த நிலையில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று புதன் பகவான் மீன ராசியில் உதயமானார். அஸ்தமன நிலையில் கிரகங்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் புதன் பகவான் மீனராசியில் உதயமாகியுள்ள காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது....