இந்தியா, மார்ச் 30 -- ஜோதிடத்தின்படி, சூரிய பகவான் கிரகங்களின் ஆட்சியாளர். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் ஆகும். சூரிய பகவானின் நிலை மாறும் போதெல்லாம், அது அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை உண்டு செய்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கடந்த மார்ச் 14 அன்று, சூரிய பகவான், மீன ராசியில் சஞ்சரித்துள்ளார். புதன் பகவான், ஏற்கனவே மீனத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சூரிய பகவான் புதனுடனும், மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனுடனும் இணைந்து பல யோகங்களை உருவாக்குகின்றனர்.

இந்த பல்வேறு இணைவுகளால் புதாதித்ய யோகமும் சுக்ராதித்ய ராஜ யோகாமும் உருவாகிறது.

இந்த இரண்டு ராஜயோகங்களும் பன்னிரண்டு ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு பெரியளவில் நல்ல பலன்களைத் தரும் என்று கூற...