இந்தியா, மே 11 -- மீத்தேன் வெளியீடு அதிகம் உள்ள தமிழகத்தில் அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று சுற்றுச்சூழல் நிபுணர் புகழேந்தி வழிகாட்டுகிறார். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

அகில உலக ஆற்றல் நிறுவனம் (International Energy Agency) 2025ல் மீத்தேன் வாயுவை தொடர்ந்து அளக்கும் பணியில், தொடர் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி பயன்பாடு மூலம் பெறும் ஆற்றல் (Fossil Fuels) காரணமாக 120 மில்லியன் டன் மீத்தேனை உலக அளவில் வெளியிட்டுள்ளது எனும் செய்தி வெளியாகியுள்ளது.

மீத்தேன் வாயு கரியமில வாயுவை விட 28 முதல் 80 மடங்கு புவிவெப்பமடைதலுக்கு அதிக காரணமாக உள்ளது. நைட்ரஸ் ஆக்சைடு, கரியமிலவாயுவைக் காட்டிலும் 273 மடங்கு புவிவெப்பமடைதல் பாதிப்பை அதிகம் ஏற்படுத்துகிறது.

ஆனால், உரிய தற்போது பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்க...