இந்தியா, ஏப்ரல் 20 -- அஜித்திற்கு சினிமா தொழில் என்றால், அவரது காதல் கார் ரேசிங். இளமை பருவத்தில் கார் ரேசில் பங்கேற்று விபத்து ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் கார் ரேஸ் பக்கமே வராமல் இருந்தார் அஜித். இந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் கார் ரேஸ் பக்கம் வந்த அஜித், இம்முறை தன்னுடைய பெயரிலேயே ரேசிங் குழுவை தொடங்கினார். இந்தக்குழு துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேசில் பங்கேற்று மூன்றாவது பரிசை தட்டிச் சென்றது.

அதன் பின்னர் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் இந்த அணி பங்கேற்றது. அந்த வரிசையில் தற்போது ஐரோப்பில் நடைபெற்று வரும் GT4 சீரிஸ் போட்டிகளில் அஜித் குழு பங்கேற்று வருகிறது.

நேற்றைய தினம் பெல்ஜியம் போட்டியில் பங்குபெறுவதற்காக அஜித் அங்குள்ள ஸ்பா சர்க்கியூட்டில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவரின் ...