இந்தியா, ஏப்ரல் 6 -- பாஜக உடனான அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையால் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிருப்தி அடைந்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை திமுகவுக்கு இழுக்க வலை விரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக மாறிய பின்னரும், பத்திரிகையாளர்களை தவறாமல் சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைப்பவர். "எதிர்க்கட்சியானால் என்ன? நான் பேசாமல் வேறு யார் பேசுவார்? அதற்காகத்தானே பொதுச்செயலாளர் என்னை அனுப்பியுள்ளார்" என்று கூறி, எந்த கேள்விக்கும் அசராமல் பதிலளிப்பார். ஆனால், மார்ச் 25 முதல் அவர் ஊடகங்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார். அதே நாளில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவுடன் கூட்டணி பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்...