இந்தியா, மார்ச் 4 -- AIADMK-BJP Alliance: பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என கூறி வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது கூட்டணி குறித்து ஆறு மாதங்களுக்கு பிறகு கேளுங்கள் எனக் கூறியிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், ஆத்தூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. கடலில் எல்லை தெரியாமல் மீன் பிடிப்பவர்களை எச்சரித்து தான் அனுப்ப வேண்டும். இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர்களின் உடமைகளை பறிப்பதையும் ஏற்று கொள்ள முடியாது. கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது யார்? யார் ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்...