இந்தியா, பிப்ரவரி 6 -- தமிழக பாஜக தலைவராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு அண்ணாமலையே தொடர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜகவில் உட்கட்சித் தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகளில் பெயர் பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. பிப்ரவரி 3ஆம் வாரத்திற்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை அறிவிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைமை சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோற்ற நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முதல் அக்கட்சித் மாநிலத் தலைவராக அவர் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

அடுத்த பாஜக தலைவருக்கான போட்டியில் முன்னாள் ஆளுநர் ...