இந்தியா, மார்ச் 29 -- நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 21 வயது மாணவி தேவதர்ஷினி, தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்வராஜ் மற்றும் தேவி தம்பதியரின் மூத்த மகளான தேவதர்ஷினி, ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார். 2021ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படிப்பை முடித்த இவர், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேவையான கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. அண்ணா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார்.

நேரடி வகுப்புகளுடன், ஆன்லைன் மூலமாகவும் படித்து வந்த தேவதர்ஷினி, இந்த முறை நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர...