இந்தியா, பிப்ரவரி 23 -- ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதம், இந்த மிளகு வடை, ஆஞ்சநேயருக்கு மாலையாக போடுவதற்கு செய்யப்படும் வடைகள் அற்புத சுவை கொண்டதாக இருக்கும். இது தட்டைபோல் இருக்கும். இதை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள். இதோ ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் பிரசாதமான மிளகு வடையை வீட்டில் செய்வது எப்படி என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது.

* முழு உளுந்து - அரை கப்

* மிளகு - ஒரு ஸ்பூன்

* அரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உளுந்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிடவேண்டும். அதை முற்றிலும் வடித்துவிட்டு, ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத அளவுக்கு வடிந்துவிடவேண்டும். நன்றாக தண்ணீர் வடிந்தவுடன், அந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாம...