இந்தியா, பிப்ரவரி 23 -- நவீன தொழில் வளர்ச்சியால் நமது உணவு முறையும் முற்றிலுமாக மாறி வருகிறது. அதில் மேற்கத்திய உணவுகளால் ஈர்க்கப்பட்ட நாம் நமது பாரம்பரிய உணவுகளை விடுத்து மேற்கத்திய உணவுகளை நமக்கு நன்மை அளிக்கிறது என நம்பியுள்ளோம். ஆனால் உலக அளவில் நமது தமிழ்நாட்டு உணவுகளுக்கு மிகவும் பிரபலமான பெயர் உள்ளது. தமிழ்நாட்டு உணவுகளை இன்றளவும் வெளிநாட்டினர் கூட ருசித்து சாப்பிடுகின்றனர். நாம் சாதாரணமாக வீட்டில் செய்யும் சமையல் மிகவும் ருசியான உணவாக இருக்கிறது. ஆனால் நாம் அதன் மேன்மையை மறந்து விட்டு மேற்கத்திய உணவுகளின் மீது நமது நாட்டத்தை செலுத்தி வருகிறோம்.

இதனை குறைக்க நாமே நமது வீட்டில் சுவையான சமையலை செய்வது தான் ஒரு வழி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த தலைமுறையினர் வழக்கமாக நாம் வீடுகளில் செய்யும் சமையலையே தெரியாமல் வைத்திருக்கின்றனர். நா...