இந்தியா, ஏப்ரல் 20 -- உங்கள் உடலுக்கு எப்போதும் தேவைப்படும் மினரல்கள் பட்டியலில் ஜிங்க், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன. இவை உங்கள் உடலுக்கு தினமும் தேவை. ஆனால் இவை உங்களுக்கு போதிய அளவு கிடைக்கவில்லை என்பது எப்போது தெரியும்? இந்த மினரல்கள் உங்கள் உடலுக்கு குறைவாக கிடைத்தால் உங்கள் உடலில் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று பாருங்கள்.

உங்கள் முட்டிக்கால்களுக்கு கீழே உள்ள பகுதிகளில் அடிக்கடி வலி ஏற்படுவது அல்லது கால்களில் வலி ஏற்படுவது உங்கள் உடலில் மெக்னீசியம் அல்லது கால்சியச் சத்துக்கள் குறைவாக உள்ளதன் அறிகுறியாகும். இந்த மினரல்கள், உங்கள் தசைகளை வலுப்படுத்தக் கூடியவையாகும். இவை குறைந்தால், உங்களுக்கு கால் தசைகளில் வலிகள் ஏற்படலாம். குறிப்பாக இந்த வலி உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது இரவு நேரங்களில் ஏற்படும்.

நீங்கள் 8 மணி நேர ந...