இந்தியா, மார்ச் 16 -- வடகிழக்கு மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தே மாதரத்தை பாடிய மிசோராம் மாநில 7 வயது சிறுமி எஸ்தர் லால்துஹாவ்மி ஹ்னாம்டேவு கிதார் பரிசளித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், "பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. மிசோரமின் அதிசயக் குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி ஹ்னாம்தே இன்று ஐஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். பாரத மாதா மீதான ஏழு வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது, அவளைக் கேட்பது ஒரு மயக்கும் அனுபவமாக அமைந்தது" என தெரிவித்து உள்ளார்.

மிசோரமைச் சேர்ந்த இளம் பாடகியான ஹ்னாம்டே, 2020 ஆம் ஆண்டு 'மா துஜே சலாம்' பாடலைப் பாடும் வீடியோ வைரலானபோது நாடு தழுவிய கவனத்தை முதன்முதலில்...