இந்தியா, ஜூலை 8 -- மண் வளமும்,விதை தற்சார்பும் உணவு பாதுகாப்பிற்கு, சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் வேளாண் உற்பத்தி 2022-23 ல் 4.7% என இருந்தது,2023-24ல் 1.4% எனக் குறைந்துள்ளது. தமிழகத்தில் 2024-25ல் வேளாண் வளர்ச்சி சமீப காலத்தில் இல்லாத 0.09% எதிர்மறை வளர்ச்சியை சந்தித்துள்ளது.

பருவநிலை மாற்றம் உணவு உற்பத்தியை பாதித்து வரும் சூழலில், சூழல் மாற்றங்களைத் தாங்கும் பாரம்பரிய விதைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் காலத்தின் கட்டாயம். ஆனால் தமிழகத்தின் மண் வளம் மிக மோசமான சூழலில் உள்ளது.

மண் வளம் கணிசமாகக் குறைந்துள்ளது

2015ல் வெளிவந்த தமிழக வேளாண் கல்லூரி அறிக்கையில்,0.8-1.3% இருக்க வேண்டிய ஆர்கானிக் கார்பன் அளவு தமிழகத்தில் 30 ஆண்டு காலத்தில்(1971-2002) 1.2%ல் இருந்து 0.68% ஆகக் குறைந்து,மேலும் அது 0.5% ஆகக் குறைந்துள்ளது. கீ...