இந்தியா, பிப்ரவரி 23 -- மிகக் குறுகிய காலத்தில் 100 படங்கள் நடித்த ஸ்டார் ஹீரோக்கள்: இன்றைய காலத்தில் வேகமாக படம் எடுப்பது என்பது மிகவும் கடினம். பான் இந்தியா ரேஞ்சில் டாப் ஹீரோக்களை வைத்து எடுப்பதால் நடிகர்களின் கால்ஷீட் தேதி பிரச்னை, அதிக பட்ஜெட், கிராபிஃக்ஸ் பணிகள் எனப் பல்வேறு சூழல்கள் என ஒரு படத்தை உருவாக்கி வெளியில் கொண்டு வர குறைந்த பட்சம் ஒரு ஆண்டு ஆகிவிடுகிறது. ஆனால், நட்சத்திர ஹீரோக்கள் ஒரு படம் செய்ய ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

தற்போதைய நிலையில் 100 படங்களை நடித்து முடிக்க இன்றைய தலைமுறை ஹீரோக்களுக்கு நீண்ட காலம் ஆகலாம். ஆனால், மிகக்குறுகிய காலத்தில் 100 படங்களை எடுத்து முடித்த டாப் ஹீரோக்களும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஜெட் வேகத்தில் 100 படங்களை நடித்து முடித்த நட்சத்திர ஹீரோக்கள் யார், பல ஆண்டுகள் எடுத்துக்க...