இந்தியா, மார்ச் 26 -- கேரளாவின் ஸ்பெஷல் ரெசிபி மாம்பழ புளிசேரி, இது பழுத்த மாம்பழங்களை வைத்து செய்யப்படும் ரெசிபியாகும். மற்ற மாம்பழ ரெசிபிக்களைப்போல் இது சுவையான ஒன்றாக இருக்கும். இது தயிர் மற்றும் தேங்காய் மசாலா சேர்த்து செய்யப்படுகிறது. இது பண்டிகை காலத்தில் செய்யப்படும் ரெசிபியாகும். புளிசேரி என்றால் புளிப்பு சுவை கொண்ட கறி என்று பொருள். இதை மோர் கறி என்றும் அழைப்பார்கள். இதில் சேர்க்கப்படும் தேங்காய் எண்ணெய் இதற்கு தனிச் சுவையைக் கொடுக்கிறது. வேறு எண்ணெய்களைக் கொண்டும் இந்த மோர் கறியை நீங்கள் தயாரித்துக்கொள்ளலாம். மாம்பழத்தின் இனிப்பு, தயிரின் புளிப்பும் சேர்த்து சூப்பரான சுவையைத் தரும்.

* மாம்பழம் - 1 (தோல் நீக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (கீறியது)

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* தயிர் - ஒரு கப் (அடித்தது)

* தேங்காய்த் துருவல் - அர...