இந்தியா, மார்ச் 16 -- தமிழ்நாட்டில் கோடை காலத்தில் மாம்பழ சீசன் தொடங்கிவிடும். இந்த சீசனில் அதிகமான மாம்பழங்கள் நமக்கு கிடைக்கும். மேலும் மாம்பழங்களில் பல வகையான மாம்பழங்களும் உள்ளன. இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழங்களை சாப்பிடலாம் என மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். இந்த சமயத்தில் கிடைக்கும் அதிகமான மாம்பழத்தை நாம் எப்போதும் பழங்களாகவோ அல்லது அதனை ஜூஸ் ஆகவோ குடிப்போம். குறைவான விலையில் கிடைக்கும் மாம்பழத்தை எளிய மக்கள் முதல் அனைவரும் சாப்பிடுவார்கள். மாம்பழங்களை அப்படியே சாப்பிட்டு சிலருக்கு சலித்து போகி இருக்கலாம். இனி மாம்பழங்களை அதிகமாக கிடைக்கும் நேரத்தில் ஜாம் செய்து வைத்தால் அது நீண்ட நாட்களுக்கு வரும். இந்த ஜாமை வைத்து பிரட், சப்பாத்தி உட்பட மேலும் பல உணவுகளுக்கும் சேர்த்து இதனை சாப்பிட முடியும். மாம்பழ ஜாம் செய்வது மிகவும் ...