இந்தியா, ஜூன் 3 -- இது ஆந்திர ஸ்பெஷல் உணவாகும். இதை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள். சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

* பருப்பு - ஒரு கப்

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* பூண்டு - 2 பல்

* விளக்கெண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு

* மாங்காய் - 1 (தோல் சீவி சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவேண்டும்)

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது, சிறியதாகவும், மாங்காயின் புளிப்பு சுவைக்கு ஏற்பவும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக புளிப்பு கொண்ட மாங்காய் என்றால் தக்காளியின் அளவை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவேண்டும்)

* பச்சை மிளகாய் - 3 (முழுதாக சேர்க்கவேண்டும்)

* உப்பு - தேவையான அளவு...