இந்தியா, மே 11 -- பாமக சார்பில் மாமல்லபுரம் அருகே நடைபெறவுள்ள சித்திரை பெருவிழாவிற்கு செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை (ECR) பயன்படுத்த காவல்துறை தடை விதித்துள்ளது. முன்னதாக இதே பகுதியில் நடந்த சம்பவம் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:- 'நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!'

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் உள்ள பாமகவின் சித்திரை பெருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, கிழக்கு கடற்கரை சாலையை வாகனங்கள் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், கடலூர் வழியாக புதுச்சேரி சென்று ECR சாலையை பயன்படுத்தி வந்த...