இந்தியா, ஜூலை 10 -- ஓரணியில் தமிழ்நாடு என்கிற பிரச்சாரத்தின் அடிப்படையில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சாரத்தை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மு.க. ஸ்டாலின் நேரடியாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இந்த முன்னெடுப்பில் ஏழு நாட்களின் முடிவில் சுமார் 50 லட்சத்து 62 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் 50 லட்சம் உறுப்பினர்களை கடந்திருப்பது குறித்து கட்சியனருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இதுதொடர்பா...