மானாமதுரை,சிவகங்கை,ராமேஸ்வரம்,மதுரை, ஏப்ரல் 1 -- மதுரை_ ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் அமைந்திருந்த 200 ஆண்டு கால பழமையான கோயில் ஆலமரம், திடீரென கீழே விழுந்ததால், பக்தர்கள் வேதனை.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மதுரை_ ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை நடுவே தல்லாகுளம் ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகால பழமையான இந்த ஆலமரத்தை முனீஸ்வரராக நினைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், நிறுத்தி அங்கு வழிபாடு நடத்துவது வழக்கம்.

மேலும் படிக்க | SC, ST மாணவர் விடுதி உணவுகள் கால்நடை பண்ணைகளுக்கு விற்பனையா? திமுக அரசை சீண்டும் அண்ணாமலை!

ஆண்டுதோறும் அன்னதானம், விழாக்கள் என ஆலமரத்தை அப்பகுதி மக்கள் பூஜித்து வந்தனர். பல்வேறு காலகட்டங்களில் அந்த ஆலமரத்தை அகற்ற எடுத்த முயற்சிகள் பயனற்று போன நில...