இந்தியா, மே 28 -- திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மே 28) வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.

1.வில்சன்

2.எஸ்.ஆர்.சிவலிங்கம்

3.ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா

ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலை...