இந்தியா, மார்ச் 30 -- தினமும் மாதுளை பழத்தின் சாற்றை பருகுவது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை சரிசெய்ய தேவையான சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. சரும பளபளப்பை அதிகரிக்கிறது. மனஅமைதியைக் கொடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் காத்து, உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

மாதுளை பழச்சாறில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. அது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. வழுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது, நோயைத் தடுக்கிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாதுளை பழத்தின் சாறில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந...