இந்தியா, பிப்ரவரி 27 -- மாசி மகத்தையொட்டி வரும் மார்ச் 13 மற்றும் மார்ச் 14ஆம் தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் மார்ச் 13ஆம் தேதி அன்று காரைக்கால் மாவட்டத்திற்கும், மார்ச் 14ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அன்றைய தினம் தேர்வுகள் இருந்தால் வழக்கம் போல நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைத்திக்குப்பம் கடற்கரையில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான கோயில்களை சேர்ந்த உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப...