இந்தியா, மார்ச் 24 -- மாங்காய் சீசன் துவங்கியாச்சு, ஒவ்வொரு மாங்காய் ரெசிபியாக செய்து சாப்பிட துவங்க வேண்டியதுதான். மாங்காயில் சாம்பார், ஊறுகாய், பச்சடி என செய்யலாம். மாங்காயில் ரசம் கூடி வைக்க முடியும் என்றால் ஜாலிதான். மாங்காய் சாம்பார், மாங்காய் ரசம், மாங்காய் பச்சடி, மாங்காய் ஊறுகாய் என ஒரு நாளையே மாங்காய் நாளாக்கலாம். வழக்கமாக மற்றவை அனைத்தையும் செய்வது எளிது. இதோ மாங்காய் ரசம் செய்வதும் எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். ஒருமுறை ருசித்தால் சீசன் முடியும் வரை தினமும் உங்கள் வீட்டில் மாங்காய் ரசம் தான்.

* மாங்காய் - 1 (தோல் சீவி விதையை நீக்கி பொடியாக நறுகிக்கொள்ளவேண்டும்)

* பச்சை மிளகாய் - 2

* ஊறவைத்த துவரம் பருப்பு - கால் கப்

* இஞ்சி - கால் இன்ச் (தட்டியது)

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* விளக்கெண்ணெய் - ஒரு ஸ்பூன்

* நல்லெண்ணெய் -...