இந்தியா, ஏப்ரல் 15 -- கோடை துவங்கிவிட்டாலே வெயில் சுட்டெரிக்கும். ஆனால் அப்போது கிடைக்கும் மாங்காய்களையும், மாம்பழங்களின் சுவையை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சி ஏற்படும். மாங்காய் பிரியர்கள் அதில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து சாப்பிடவேண்டும் என்று துடிப்பார்கள். அந்த மாங்காயில் சாம்பார், ரசம், மோர், பச்சடி, பொரியல் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டேதான் போகும். மேலும் மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்ற பழமொழியும் உண்டு. அது உண்மையும் ஆகும். மாங்காய் இருந்தால் எந்த சாதத்தையும் வழக்கத்தைவிட அதிகம் தான் எடுத்துக்கொள்வீர்கள்.

எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். வெறும் பச்சை மாங்காயை நறுக்கிப்போட்டு, உப்பு போட்டு சாப்பிட்டாலே ஒரு தட்டு சோறு கூட எளிதில் காலியாகிவிடும். மாங்காய் இருக்கும்போது வேறு சைட் டிஷ்...