இந்தியா, ஏப்ரல் 19 -- மதிமுக கட்சி பதவியில் இருந்து துரை வைகோ விலகியது குறித்து நாளை நடைபெறவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்தில்இறுதி முடிவு மற்றும் அறிவிப்பை தலைவர் வைகோ வெளியிடுவார் என்று மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் தெரிவித்து உள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் பதவி விலகல் தொடர்பாக, கட்சித் தலைவர் வைகோவுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மதிமுக பொருளாளர் செந்தில் அதிபன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

செந்தில் அதிபன் கூறியதாவது: "துரை வைகோவின் பதவி விலகல் குறித்து தலைவர் வைகோவுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தோம். இந்த விவகாரத்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதித்தோம். நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தக்க முடிவுகள் எடுக்கப்படும். இந்த உட்கட்சி விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்படும்...