இந்தியா, ஏப்ரல் 20 -- மதிமுக முதன்மை செயலாளர் பதவியை ராஜினமா செய்யும் முடிவை வாபஸ் பெறுவதாக துரை வைகோ தெரிவித்து உள்ளார்.

மதிமுக தலைவர் வைகோவின் சமாதான முயற்சியால், துரை வைகோவும் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும் இணைந்து கட்சி நலனுக்காக பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர். இன்று சென்னையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது, மதிமுகவில் நிலவிய உட்கட்சி பதற்றத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 19), துரை வைகோ தனது முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, மல்லை சத்யாவின் செயல்பாடுகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, 40-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், துரை வைகோவின் ராஜினாமாவை தலைமை ஏற்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். இன்றைய நிர்வாகக்...