இந்தியா, மார்ச் 4 -- மருமகள் சீரியல் மார்ச் 04 எபிசோட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரை தன்னுடைய அப்பா வீட்டிற்கு பிரபுவுடன் சென்றாள். ஆனால், அங்கு காத்திருந்த சிவப்பிரகாசத்தின் மனைவி அவர்களை காயப்படுத்தி பேசினாள். இதனால், ஆதிரை அங்கிருந்து சென்றாள்' இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்று இருக்கின்றன.

மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், எல்லோரும் ஆதிரையை சமாதானம் செய்து சாப்பிட வைத்தார்கள். அவள் சாப்பிட, சாப்பாட்டில் கை வைத்த அந்த நொடியில், அங்கு தமிழரசியின் தூண்டுகோலில் கார்த்திக் வந்து நின்றான்.

மேலும் படிக்க | ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்த பின்னணி

அவனைப் பார்த்த உடனேயே இவன் ஏதாவது பிரச்சினையை கிளப்புவான் என்று யூகித்த பிரபு, அவனை உடனடியாக வெ...