இந்தியா, பிப்ரவரி 26 -- மருமகள் சீரியல் பிப்ரவரி 26 எபிசோட்: மருமகள் சீரியலின் இன்றைய ப்ரோமோவில், ஆதிரையை எஸ் பி நேரடியாக சந்திக்கிறார். அப்போது ஆதிரை நடந்த விஷயத்தை அவரிடம் சொல்கிறார். அப்படியே கட் செய்தால், ஆதிரை ரத்த காயத்துடன் ஜெயிலுக்குள் படுத்திருக்கிறாள். இதைப் பார்த்த பிரபு அதிர்ச்சியில் உறைந்து போகிறான். இன்னொரு பக்கம், மேகலை வேல்விழி அப்பாவிடம் ஆதிரையை காப்பாற்ற வழக்கறிஞரை நியமிக்க உதவுங்கள் என்று கெஞ்சுகிறாள். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், எஸ் பி மகனை மலையில் இருந்து தள்ளி விட்டதால், ஆதிரை சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்தாள். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் அவளை தவறான வாக்குமூலத்தை கொடுக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தாள். ஆனால், அதற்கு ஆதிரை கடை...